மாவட்ட செய்திகள்

அனுமதி இன்றி கருப்பு கொடி கட்டிய 2 பேர் கைது + "||" + 2 arrested for building black flag without permission

அனுமதி இன்றி கருப்பு கொடி கட்டிய 2 பேர் கைது

அனுமதி இன்றி கருப்பு கொடி கட்டிய 2 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் அறிவித்தது.
செந்துறை,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் அறிவித்தது. அதற்கு ஆதரவாக அரியலூர் மாவட்டம், செந்துறை கடைவீதியில் காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் கருப்பு கொடி ஏற்றி தமிழ்நாடு உழைக்கும் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தம்பி மேகராஜன் மற்றும் தமிழ் தேச குடியரசு கட்சி மாநில அமைப்பாளர் உதயசூரியன் ஆகியோர்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விரைந்து வந்து அனுமதி இன்றி கருப்பு கொடி கட்டியதாக 2 பேரையும் கைது செய்தனர்.