மாவட்ட செய்திகள்

தஞ்சையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை திருடிய 3 பேர் கைது + "||" + Three arrested for stealing motorcycle wallet

தஞ்சையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை திருடிய 3 பேர் கைது

தஞ்சையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை திருடிய 3 பேர் கைது
தஞ்சையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை இ.பி.காலனி ஆரோக்கியநகரை சேர்ந்தவர் மதியரசன்(வயது23). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.டெக். படித்து வருகிறார். இவர் நேற்று நாஞ்சிக்கோட்டை சாலையில் அண்ணாநகரில் உள்ள ஒரு கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றார்.


இதை பார்த்த மர்மநபர்கள், மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பையை திருடிக் கொண்டு சென்றுவிட்டனர். அந்த பையில் ரூ.5 ஆயிரம் இருந்தது. கடையில் இருந்து திரும்பி வந்த மதியரசன், மோட்டார் சைக்கிளில் இருந்த பையை காணாது அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தெற்கு போலீஸ நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

3 பேர் கைது

அதில் 3 வாலிபர்கள் பணம் வைத்திருந்த பையை திருடி சென்றது தெரியவந்தது. இந்த காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அந்த 3 பேரும் தஞ்சையை அடுத்த காசவளநாடு பகுதியை சேர்ந்த அருண்குமார்(25), கீழவஸ்தாசாவடியை சேர்ந்த மாணிக்கம்(22), தில்லைநகரை சேர்ந்த ஜெய்கணேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளித்தலையில் அமைச்சர் உறவினர் வீட்டில் நகை-பணம் திருட்டு
குளித்தலையில் அமைச்சர் உறவினர் வீட்டில் நகை-பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகைகள்-ரூ.2¾ லட்சம் திருட்டு
வெள்ளியணை அருகே முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகைகள் மற்றும் ரூ.2¾ லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருட்டு
குளித்தலை அருகே, டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டன.
4. களியக்காவிளை அருகே பட்டப்பகலில் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
களியக்காவிளை அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. பெண்ணிடம் நூதன முறையில் நகை-பணம் திருட்டு
பெண்ணிடம் நூதன முறையில் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.