மாவட்ட செய்திகள்

ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி திருட்டு 2 பேருக்கு வலைவீச்சு + "||" + Pretending to be an astrologer, a 9-pound chain robbery has 2 people

ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி திருட்டு 2 பேருக்கு வலைவீச்சு

ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலி திருட்டு 2 பேருக்கு வலைவீச்சு
திருமக்கோட்டை அருகே ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருமக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூர் ராஜாதெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது35). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செவ்வந்தி (30). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை. நேற்று 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் செவ்வந்தியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை ஜோதிடர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்களிடம், செவ்வந்தி தனக்கு குழந்தை இல்லை என்று கூறி உள்ளார்.


இதையடுத்து 2 பேரும், ஜாதகம் பார்ப்பது போல் நடித்து, ‘உங்களுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது, ஆதலால் கழுத்தில் அணிந்துள்ள சங்கிலியை கழற்றி தாருங்கள். சுடுகாட்டில் வைத்து பூஜை செய்து தருகிறோம்’ என கூறினர்.

9 பவுன் சங்கிலி

இதை நம்பிய செவ்வந்தி தனது கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலியை கழற்றி கொடுத்தார். அந்த சங்கிலியை வாங்கி கொண்ட 2 பேரும் சுடுகாட்டில் வைத்து பூஜை செய்து விட்டு திரும்ப கொண்டு வருகிறோம் என கூறி விட்டு தாங்கள் வந்த மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் திரும்ப வரவில்லை.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் 2 பேரும் ஜோதிடர்கள் போல் நடித்து 9 பவுன் சங்கிலியை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செவ்வந்தி, திருமக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிடர்கள் போல் நடித்து பெண்ணிடம் 9 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரத்தில் பயங்கரம் இளம்பெண் கற்பழித்து கொலை முகத்தை சிதைத்து சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு
விழுப்புரத்தில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. வாக்குச்சாவடியில் இருந்து ஓட்டுப்பெட்டியை தூக்கிச்சென்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது போலீசார் வலைவீச்சு
விராலிமலை அருகே வாக்குச்சாவடியில் இருந்து ஓட்டுப்பெட்டியை தூக்கிச்சென்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவருடைய 2 மகன்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. நாகர்கோவில் அருகே துணிகரம் அம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
நாகர்கோவில் அருகே அம்மன் கோவிலில் நகை- பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி மர்ம நபருக்கு வலைவீச்சு
கொரடாச்சேரி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. திருக்கோவிலூரில் நடுரோட்டில் வெடித்து சிதறிய நாட்டுவெடிகள் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூரில் நடுரோட்டில் நாட்டுவெடிகள் வெடித்து சிதறியது. இது தொடர்பாக மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.