கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகிறார், சித்தராமையா?


கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகிறார், சித்தராமையா?
x
தினத்தந்தி 27 July 2019 10:47 PM GMT (Updated: 27 July 2019 10:47 PM GMT)

கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

பெங்களூரு, 

எதிர்க்கட்சி தலைவராக இருந்த எடியூரப்பா முதல்-மந்திரியாகி உள்ளார். இந்த நிலையில், பா.ஜனதா ஆட்சி அமைந்திருப்பதால் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகி உள்ளது. இதையடுத்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு காங்கிரசில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார், எச்.கே.பட்டீல் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கூட்டணி ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக இருந்ததால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று பரமேஸ்வர் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. ஆனால் எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையாவை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story