செங்கல்பட்டு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


செங்கல்பட்டு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 July 2019 10:00 PM GMT (Updated: 28 July 2019 5:46 PM GMT)

செங்கல்பட்டு அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பாரேரி கிராமம் 12-வது வார்டு துலுக்கானத்தம்மன் கோவில் தெருவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இங்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சிமெண்டு சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அந்த சாலையின் ஓரம் கால்வாய் கட்டப்பட்டது. இதனால் சாலையின் அகலம் குறைந்து காணப்படுகிறது.

சாலையோர வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் இறந்து போனால் சாலையை மறித்து பந்தல் அமைத்தால் ஒரு வாகனமும் செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்தநிலையில் சாலையின் நடுவே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். ஆகவே சேதம் அடைந்த பாரேரி கிராம சாலையை மாவட்ட நிர்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story