அம்மாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போலீசாரை கண்டித்து நடந்தது


அம்மாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போலீசாரை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 30 July 2019 10:15 PM GMT (Updated: 30 July 2019 8:35 PM GMT)

அம்மாப்பேட்டையில் போலீசாரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலியமங்கலம்,

அம்மாப்பேட்டை அருகே உள்ள சேர்மாநல்லூர், கம்மந்தங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த சிலர் வெண்ணாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். வெண்ணாற்றில் இருந்து தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வரும் நிலையில் குறிப்பிட்ட தரப்பினர் மீது மட்டும் போலீசார் நடவடிக்கை எடுப்பதை கண்டித்து அம்மாப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் தாமரைச்செல்வி, ஒன்றிய துணை செயலாளர் குருமூர்த்தி, நிர்வாகிகள் பாலு, சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக தஞ்சை-நாகை சாலையில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story