மயிலாடுதுறையில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


மயிலாடுதுறையில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 31 July 2019 11:00 PM GMT (Updated: 31 July 2019 6:44 PM GMT)

மயிலாடுதுறையில், ஹெல்மெட் அணியாமல் வந்தால் பெட்ரோல் கிடையாது என்று அறிவிப்பு பேனர் வைத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை,

விபத்து ஏற்படும்போது உயிர் இழப்பை தவிர்க்கும் வகையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை நடைமுறைப்படுத்த மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகரில் உள்ள 12 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என்ற அறிவிப்பு பேனர் வைப்பதற்கு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் மேற்கண்ட அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனிடையே பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வரும் சில வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனங்களில் வராமல் கேன்களை எடுத்து வந்தால் பெட்ரோல் தருவீர்களா? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் தான் போலீசாரின் அறிவுறுத்தலுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியும் என்று பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

Next Story