மாவட்ட செய்திகள்

ஆடிப்பூர விழாவையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம் + "||" + Mannargudi Rajagopalaswamy Temple Therottam due to Adipuram Festival

ஆடிப்பூர விழாவையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம்

ஆடிப்பூர விழாவையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம்
ஆடிப்பூர விழாவையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மன்னார்குடி,

தமிழகத்தில் தலைசிறந்த வைணவ தலங்களில் ஒன்றாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசாமி கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.


விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி செங்கமலத்தாயார், ராஜகோபாலசாமியுடன் அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் புறப்பாடு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தேரோட்டம்

இந்த நிலையில் ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் செங்கமலத்தாயார் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர்வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். விழாவில் கோவில் செயல் அலுவலர் சங்கீதா மற்றும் பணியாளர்கள், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கறம்பக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
கறம்பக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2. ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை: நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
3. அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் கோவில் சிதிலமடைந்து வரும் அவலம் புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை
கரூர் அருகே சிதிலமடைந்து வரும் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்கோவிலை புனரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. ஆவணி 2-வது ஞாயிறு: நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
ஆவணி 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.
5. ஆவணி முதல் ஞாயிறு: நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை