கோவில்பட்டி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டி அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2019 9:45 PM GMT (Updated: 5 Aug 2019 9:48 PM GMT)

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, கோவில்பட்டி அருகே இடைசெவலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே இடைசெவல் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கி, முழு சம்பளம் ரூ.229 வழங்க வேண்டும். ஊருணிகளை ஆழப்படுத்தி, நீர்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கார்த்திகைபட்டி வரையிலும் அமைக்கப்படவுள்ள இணைப்பு சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாமல் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு அடங்கல் சிட்டாவை பழைய முறையில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் சேதுராமலிங்கம், தாலுகா செயலாளர் பாபு, நகர செயலாளர் சரோஜா, நகர துணை செயலாளர் அலாவுதீன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுப்புராஜ், முன்னாள் கவுன்சிலர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story