சென்னையில் அறவாணர் சாதனை விருது வழங்கும் விழா


சென்னையில் அறவாணர் சாதனை விருது வழங்கும் விழா
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 5:09 PM GMT)

விழாவுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பேராசிரியர் க.ராமசாமி மற்றும் தமிழ்பற்றாளன் ஆகியோருக்கு ‘அறவாணர் சாதனை விருது’களை வழங்கினார்.

சென்னை,

அறவாணர் சாதனை விருது வழங்கும் விழா சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கி கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பேராசிரியர் க.ராமசாமி மற்றும் தமிழ்பற்றாளன் ஆகியோருக்கு ‘அறவாணர் சாதனை விருது’களை வழங்கினார். அறிவியல் நகரம் துணைத் தலைவர் உ.சகாயம் ஐ.ஏ.எஸ். புத்தகங்களை வெளியிட்டு, விருதாளர்களை பாராட்டி சிறப்புரை ஆற்றினார்.

விழாவில், அறவாணரின் பேரன்கள் அருணன் அறவாணன், அகிலன் அறவாணன், பேத்திகள் அமுதயாழினி, அமுதப்பாவை ஆகியோர் பதிப்பித்த, ‘எங்கள் தாத்தா அறவாணர் அறமொழிகள்’, பேராசிரியர் இரா.அறவேந்தனின், ‘அப்பா அறவாணர்’, கவிஞர் வேலூர் ம.நாராயணனின் ‘அறவாணரின் அனல் சிந்தனைகள்’, முனைவர் திருநாவுக்கரசின் ‘சுற்றுலா வினோதங்கள்’, பேராசிரியர் சா.வளவன் எழுதி மைதிலி வளவன் பதிப்பித்த 25 புத்தகங்கள், பேராசிரியர் வாணி அறிவாளனின் ‘பாலைத்தினை மரபு கட்டுடைப்பும் அகநானூற்றுக் கட்டமைப்பும்’, க.ப.அறவாணரின் தமிழ் மக்கள் வரலாறு-தொழில் தமிழர் காலம், தமிழ் அடிமையானது ஏன்? எவ்வாறு? ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் புத்தகங்களை பெற்று வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சு.தமிழ்வேலு நன்றியுரை வழங்க விழா நிறைவுபெற்றது.

Next Story