ஆலாந்துறை அருகே, ரேஷன் கடையை சேதப்படுத்தி காட்டு யானை அட்டகாசம் - மலைவாழ் மக்கள் அச்சம்
ஆலாந்துறை அருகே ரேஷன்கடையை காட்டுயானை சேதப்படுத்தியதால் மலைவாழ்மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
பேரூர்,
கோவையை அடுத்த ஆலாந்துறை அருகே தானிகண்டி எனும் மலைவாழ் கிராமம் அமைந்து உள்ளது. இப்பகுதி மக்களுக்காக அங்கு ரேஷன்கடை செயல்பட்டுவருகிறது. நேற்று அதிகாலை ரேஷன் கடை அருகே வந்த காட்டு யானை ஒன்று, ரேஷன் கடையின்முன்பக்ககதவை முட்டித்தள்ளியது. இதில் ரேஷன் கடையின்முன்பக்கசுவர் விரிசல் அடைந்ததோடு, கடையின் மேற்கூரையாக போடப்பட்டிருந்த சிமெண்டு சீட்டுகள் உடைந்து கீழே விழுந்தன.
இதைத்தொடர்ந்து சிறிது நேரம் கடை அருகே சுற்றிய காட்டு யானை அங்கிருந்துவனப்பகுதிக்குள்சென்று விட்டது.
இந்தநிலையில் ரேஷன்கடை சேதமடைந்ததைகண்டுஅப்பகுதிமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த ஆலாந்துறை போலீசார் அப்பகுதிமக்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் பொதுமக்கள்தனியாக செல்லக்கூடாது என்று அறிவுரை கூறினார்கள்.
ரேஷன்கடையை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசத்தில் ஈடுபட்டு உள்ளதால் மலைவாழ்மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story