மாவட்ட செய்திகள்

வில்லியனூர் பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - அதிகாரி அறிவிப்பு + "||" + In the Villianur area Merchants should eliminate aggression

வில்லியனூர் பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - அதிகாரி அறிவிப்பு

வில்லியனூர் பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - அதிகாரி அறிவிப்பு
வில்லியனூர் பகுதியில் வியாபாரிகள் ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும் என்று துணைமாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,

வில்லியனூர் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் அதிகாரி சிவசங்கரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வில்லியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள நெடுஞ்சாலைகள், கடைவீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் கடை வைத்திருப்பவர்களும், சிறுவியாபாரிகளும் சாலைகளில் கடைகளை விரிவு படுத்தியும், பெயர் பலகைகளை வைத்தும், வாகனங்களை நிறுத்தியும் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.


இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் சிலர் சாலையோர கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிவதை தடுப்பதால் குப்பைகள் சேர்வதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.

மேற்கண்டவாறு பொதுசாலைகளிலும், கடைவீதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளோர் உடனடியாக அந்த ஆக்கிரமிப்பை நீக்க வேண்டுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செய்யதவறினால் மேலே குறிப்பிட்ட ஆக்கிரமிப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் அகற்றப்பட்டு அதற்குரிய செலவு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும்.

இந்த முயற்சியால் சாலைகளை பயன்படுத்துவோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் கழிவுநீர் கால்வாய்களின் பயன்பாடும் மேம்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வில்லியனூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய வீடு அகற்றம்; பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
வில்லியனூர் அருகே வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய வீடு அகற்றப்பட்டது. அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் ஊருணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலை
கிராமப்புறங்களில் உள்ள ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் அகற்றப்படாத நிலை உள்ளதால் மாவட்ட நிர்வாகம் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
3. உக்கடத்தில், வாய்க்கால் ஆக்கிரமிப்பு - 268 வீடுகள் இடித்து அகற்றம்
கோவை உக்கடத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 268 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
4. நீர்நிலைகளும், ஆக்கிரமிப்புகளும் ...!
நீர் மனித வாழ்வின் ஆதாரமானது என்பது அனைவரும் அறிந்ததே. ஏன் பூலோக உயிர்கள் அனைத்திற்கும் அதுவே ஆதாரமானது. ஆனால், அத்தகைய நீர் இன்று பல விதங்களில் முக்கியமாக மனிதனின் பேராசைக்காக விரயமாக்கப்படுகிறது. இன்னொரு புறம் நீராதாரங்கள் அழிக்கப்படுகின்றன.
5. மணலி புதுநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு; 26 பேர் கைது
மணலி புதுநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த 26 பேர் கைது செய்யப்பட்டனர்.