மாவட்ட செய்திகள்

குடிமராமத்து திட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது + "||" + Cauvery Delta districts have been given importance in the Citizenship Program

குடிமராமத்து திட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

குடிமராமத்து திட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
குடிமராமத்து திட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது என்று, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் கூறினார்.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரி பழவாறு தூர் வாரும் பணி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கும்பகோணம் உதவி கலெக்டர்(பொறுப்பு) ஜெயபாரதி, கும்பகோணம், திருவிடைமருதூர் தாசில்தார்கள் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, கரூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் தூர்வாருதல் மற்றும் குடிமராமத்து திட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பாசன மற்றும் வடிகாலுக்கு பயன்படும் ஏ மற்றும் பி வகை வாய்க் கால்கள், பெரிய ஆறுகள், குளங்கள், ஓடைகள் போன்றவற்றில் மேட்டூர் அணையில் திறந்துவிடப்படும் நீர் மற்றும் மழை, வெள்ள காலங்களில் கிடைக்கும் உபரி நீரை சேமிக்க வேண்டும் என்பதே முதல்- அமைச்சரின் நோக்கம். இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு தூர்வாரும் பணிக்கு ரூ.60.85 கோடியும், குடிமராமத்து திட்டத்துக்கு ரூ.500 கோடியும் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களில்...

இதில் காவிரி டெல்டாவில் உள்ள 9 மாவட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 1800-க்கும் மேற்பட்ட குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தூர்வாரும் பணியின் தரத்தை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.வெளி மாவட்டங்களில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 வாரங்களில் அனைத்து பணிகளும் இரவு பகலாக செய்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு மணிவாசன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடிமராமத்து திட்ட பணிகளால் இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி தமிழக அரசு தகவல்
குடிமராமத்து திட்ட பணிகளால் இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. குடிமராமத்து திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள்; குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
குடிமராமத்து திட்டப்பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
3. குடிமராமத்து திட்டத்தில் பலப்படுத்தப்படும் கண்மாய் கரைகள்
மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் கரைகள் பலப் படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
4. குடிமராமத்து திட்டத்தில் 110 கண்மாய்கள் சீரமைப்பு - கலெக்டர் ஆய்வு
மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 110 கண்மாய்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
5. கீழ்வேளூர் ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி கலெக்டர் ஆய்வு
கீழ்வேளூர் ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு செய்தார்.