மாவட்ட செய்திகள்

செய்யாறு அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை + "||" + Couple commit suicide by drinking poison

செய்யாறு அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

செய்யாறு அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
செய்யாறு அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
செய்யாறு,

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த கோவிலூர் கிராமத்தின் ஏரியில் சுமார் 25 வயதுடைய ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக அனக்காவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், செய்யாறு தாலுகா விளாரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி அகிலா (வயது 24), சுரேசின் சித்தப்பா மகன் அய்யப்பன் என்பது தெரியவந்தது.

விஷம் குடித்து தற்கொலை

அய்யப்பனுக்கும், அகிலாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றதும், அவர்கள் நேற்று முன்தினம் இரவு கோவிலூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கு வந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.