சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில்


சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 18 Aug 2019 4:21 AM IST (Updated: 18 Aug 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

தானே, 

நவிமும்பை நெருல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீபாத் காம்ளே(வயது61). ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி தான் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார், ஸ்ரீபாத் காம்ளே மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற போலீஸ் அதி காரிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறியது.

Next Story