புத்தகம் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு


புத்தகம் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொள்ளலாம் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
x
தினத்தந்தி 18 Aug 2019 10:45 PM GMT (Updated: 18 Aug 2019 7:41 PM GMT)

புத்தகம் படிப்பதன் மூலம் அறிவை வளர்த் துக்கொள்ளலாம் என்று அமைச்சர் துரைக் கண்ணு கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றது. தற்போது 4-வது ஆண்டாக புத்தகத்திருவிழா அரண்மனை வளாகத்தில் தொடங்கியது. இதற்காக 101 அரங்கங்கள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு புத்தக அரங்கை திறந்து வைத்து பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புத்தகம் வாசிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளின் போது புத்தகங்கள் வழங்கி வருகிறார்.

புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் மாணவர்கள் தங்களின் அறிவை பெருக்கி திறமையை வளர்த்து கொள்ளலாம். ஒரு மனிதன் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் சிறந்த பண்பாளராக உருவாக முடியும். புத்தகம் படிப்பதால், மனிதர்களின் அறிவு, ஆற்றலை வளர்த்துக் கொள்ளலாம். மாணவ மாணவிகள் கல்வித்திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

10 நாட்கள் நடக்கிறது

இந்த புத்தகத்திருவிழா வருகிற 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் போட்டித்தேர்வுகளுக்கான குரூப் 1, குரூப் 2 மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ள தேவையான பதிப்பாசிரியர்களின் புத்தக வெளியீடுகள் இந்த அரங்கத்தில் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் படிப்பு முடித்தவுடன் போட்டித்தேர்வுக்கு தயார்ப்படுத் திக் கொள்ள இந்த புத்தகங் கள் பெரும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அடையாள அட்டை

தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனை மேம்படுத்தும் பொருட்டு அனைத்து மாணவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 1 லட்சத்து 24 ஆயிரத்து 463 அடையாள அட்டைகள் பெற்று வழங்கப்படவுள்ளது. அதன் முன்னோட்டமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டையை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் மோகன், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், துணைத்தலைவர் ரமேஷ், இயக்குனர் புண்ணியமூர்த்தி, நிக்சல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சுற்றுலா அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

‘தினத்தந்தி’ வெளியீடு

இந்த புத்தக கண்காட்சியில் அரங்கு 52 மற்றும் 53 ஆகியவற்றில் ‘தினத்தந்தி’ புதிய வெளியீடுகளான மரண பயத்தில் இருந்து மீட்டு, மகிழ்ச்சியுடன் வாழ உதவும் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற புத்தகம், நமக்குள் சில கேள்விகள், பழைய சோறு, விதியை மாற்றும் 40 சித்தர்கள் ஆகிய புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளன. அதேபோல சிறகை விரிக்கும் மங்கள்யான், அதிசயங்களின் ரகசியங்கள், பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம், ஆதிச்சநல்லூர்-கீழடி மண் மூடிய மகத்தான நாகரிகம், புரட்டிப்போடும் புலன் விசாரணை, திரை உலக அதிசயங்கள், நீங்களும் தலைவர் ஆகலாம், உலகம் பிறந்தது உனக்காக, இதயம் கவர்ந்த இலக்கிய காட்சிகள், அருள்தரும் சித்தர்கள், ரகசியமான ரகசியங்கள், அறிவோம் இஸ்லாம், அமானுஷ்ய ஆன்மிகம், பைபிள் மாந்தர்கள், அதிகாலை இருட்டு, நோய் தீர்க்கும் சிவலாயங்கள், நதிபோல ஓடிக்கொண்டிரு, வரலாற்று சுவடுகள், சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், கலாம் ஒரு சரித்திரம், இலங்கை தமிழர் வரலாறு, இதயம் தொட்ட பழமொழிகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Next Story