மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்: அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார் + "||" + Special People Grievance Camp in Sivaganga: Minister Baskaran was inaugurated

சிவகங்கையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்: அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

சிவகங்கையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம்: அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
சிவகங்கையில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
சிவகங்கை,

முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாம் நிகழ்ச்சி தொடக்க விழா சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா வரவேற்றார். முகாமை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் ஏற்கனவே குடிமராமத்துப் பணி திட்டத்தை தொடங்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.


இந்த திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கண்மாய், குளங்கள், ஊருணிகள்தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பெரியாறு தண்ணீர் வந்தால் எந்த பாதிப்பும் இல்லாமல் செல்லும் வகையில் அனைத்து கால்வாய்களும் தூர் வராப்பட்டுள்ளன.

தற்போது பொதுமக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக குறைதீர்க்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும் கிராமப்பகுதிகளில் ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை நகராட்சியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) மனுக்களை கொடுக்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு முகாம்களை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்தி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, தாசில்தார் கண்ணன், கூட்டுறவு வங்கி தலைவர் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் அப்துல்கபூர், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் கருணாகரன், சசிக்குமார், பாண்டி, பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகங்கை மாவட்டத்தில் கடைகள் திறப்பு; சாலைகளில் மக்கள் கூட்டம்
ஊரடங்கில் சில தளர்வுகள் நேற்று முதல் அமல்படுத்தப்Sபட்டதால் சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு சாலைகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக சென்றனர். வங்கிகளில் கூட்டம் வழக்கத்தைவிட அலைமோதியது.
2. சிவகங்கையில் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கேமரா மூலம் மக்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.
3. சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள்; கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
4. சிவகங்கைக்கு வந்த ‘ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள்’ - பரிசோதனை எப்போது? அதிகாரி விளக்கம்
சிவகங்கைக்கு ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவிகள் வந்துள்ளன. அந்த கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெறுவது எப்போது? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்தார்.
5. சிவகங்கையில் கொரோனா நோயாளிகள் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்
சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த 6 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.