மாவட்ட செய்திகள்

மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் + "||" + During the festival of Mata Temple Special train from Trichy to Velankanni

மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்

மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்
திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
திருச்சி,

வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி திருச்சியில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ‘டெமு’ ரெயில் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப் படும் ரெயில் வேளாங்கண்ணிக்கு நள்ளிரவு 2 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.


இதேபோல வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சாவூருக்கும், தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. வேளாங்கண்ணியில் இருந்து அதிகாலை 3.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு தஞ்சாவூருக்கு அதிகாலை 5.45 மணிக்கு சென்றடையும். தஞ்சாவூரில் இருந்து இரவு 8.55 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 10.05 மணிக்கு வந்தடையும்.

வேளாங்கண்ணி-நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி இடையே நாளை முதல் வருகிற 8-ந் தேதி வரை சிறப்பு ‘டெமு’ ரெயில் இயக்கப்பட உள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து பகல் 1.45 மணிக்கும், மாலை 3.15 மணிக்கும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும். இதேபோல வேளாங்கண்ணியில் இருந்து பகல் 12.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் நாகப்பட்டினத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தவுட்டுப்பாளையம் பகவதியம்மன் கோவில் திருவிழா நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2. மஞ்சம்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழா கிராமமக்கள் ஒன்றுகூடி தயார் செய்த கறிவிருந்து
மஞ்சம்பட்டி புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விருந்துக்காக கிராம மக்கள் ஒன்றுகூடி சமையல் செய்தனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கறிவிருந்து வழங்கப்பட்டது.
3. ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் மழையையும் பொருட் படுத்தாது பக்தர்கள் குவிந்தனர்.
4. காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர்
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலைக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
5. பொதுப்பணித்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றம் ராஜாக்கமங்கலம் அருகே பரபரப்பு
ராஜாக்கமங்கலம் அருகே பொதுப்பணித்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கோவில் இடித்து அகற்றப்பட்டது.