ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊட்டியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஊட்டி,
நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நீலகிாி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிாி, பந்தலுாா், குந்தா, கூடலுாா் ஆகிய தாலுகாக்களில் 551 இடங்களில் விநாயகா் சிலை வைக்க போலீசா் அனுமதி அளித்துள்ளனா்.
இங்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதன்படி ஊட்டி தாலுகாவில் வருகிற 4 மற்றும் 5-ந்தேதியும், பந்தலூர், கூடலூர் பகுதியில் 8-ந் தேதியும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.
குன்னுாா் மற்றும் கோத்தகிாியில் 4 மற்றும் 5-ந் தேதியும் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க போலீசார் அனுமதி அளித்து உள்ளனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதனிடையே நேற்று நீலகிாி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் ஊட்டியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. சோிங்கிராஸ் பகுதியில் தொடங்கிய கொடி அணிவகுப்பு காபிஹவுஸ் வழியாக மத்திய பஸ் நிலையம் சென்றடைந்தது. அதனை தொடா்ந்து காந்தல் முக்கோணத்திலிருந்து ரோகிணி தியேட்டா் சந்திப்பு வரை கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், அதிரடிப்படை போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
இதேபோல் கோத்தகிரியில் குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், ஆனந்த், சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொடி அணிவகுப்பு கோத்தகிரி டானிங்டனில் இருந்து தொடங்கி காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், காம்பாய் கடை, ராம்சந்த் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story