மாவட்ட செய்திகள்

செய்யூர் அருகே கார் மோதி தந்தை, மகள் பலி + "||" + Near Cheyyur Car collided Father, daughter killed

செய்யூர் அருகே கார் மோதி தந்தை, மகள் பலி

செய்யூர் அருகே கார் மோதி தந்தை, மகள் பலி
செய்யூர் அருகே கார் மோதி தந்தை, மகள் பலியானார்கள்.
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த கடப்பாக்கம் அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 50), தையல் தொழிலாளி. இவரது மகள் ஐஸ்வர்யா (22). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று காலை உறவினர் ஒருவரது திருமணத்திற்கு செல்வதற்காக சைக்கிளில் சென்றனர். சைக்கிள் டயரில் காற்று குறைவாக இருந்ததால் ரங்கநாதன் சைக்கிளை தள்ளி கொண்டு சாலை ஓரமாக செல்ல அவரது மகள் சைக்கிளின் பின்னால் நடந்து சென்றார்.


நல்லூர் பகுதியில் செல்லும்போது அந்த வழியாக வந்த கார் எதிரே வந்த லாரியில் மோதாமல் இருப்பதற்காக திரும்பவே கார் இவர்கள் இருவர் மீதும் மோதியது.

இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

மேலும் அவர்களை மேல் சிகிச்சைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். தகவல் அறிந்த சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

காரை ஓட்டி வந்த சென்னையை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியை போலீசார் கைது செய்தனர். இவர் திருக்கடையூரில் வயலின் கச்சேரிக்காக தனது மகனுடன் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சேத்தூரில் பரபரப்பு: சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற வியாபாரி கைது
சேத்தூரில் சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆட்டு வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
2. ஆலங்குளம் அருகே ஊரடங்கில் விபத்து: கார் மோதி பெண்கள் உள்பட 3 பேர் பலி - புல் அறுக்க வயலுக்கு சென்றபோது பரிதாபம்
ஆலங்குளம் அருகே ஊரடங்கு நேரத்தில் கார் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
3. தாம்பரம் அருகே, சுவர் இடிந்து தந்தை, 2 மகள்கள் பலி
தாம்பரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தந்தை, 2 மகள்கள் என 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. தாம்பரம் அருகே, சுவர் இடிந்து தந்தை, 2 மகள்கள் பலி
தாம்பரம் அருகே சுவர் இடிந்து விழுந்து தந்தை, 2 மகள்கள் என 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. காரியாபட்டியில் கொடூர சம்பவம், வாளி தண்ணீரில் மூழ்கடித்து குழந்தையை கொன்ற பெற்றோர் கைது
பிறந்து 11 மாதம் ஆன ஆண் குழந்தையை வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக தந்தையும் தாயும் கைது செய்யப்பட்டனர். கொலையை மறைத்ததாக அவர்களது குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.