பாதுகாப்பு கேட்டு நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்


பாதுகாப்பு கேட்டு நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 14 Sept 2019 4:00 AM IST (Updated: 14 Sept 2019 3:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி நேற்று தஞ்சம் அடைந்தனர்.

நெல்லை, 

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி நேற்று தஞ்சம் அடைந்தனர்.

காதல் ஜோடி தஞ்சம்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள வடக்கு தாமரை குளம் கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் மகள் ரம்யா (வயது 19). பி.காம்.பட்டதாரி. நாகர்கோவில் ஒழுகினசேரியை சேர்ந்தவர் பிரகாஷ்குமார் மகன் முருகேஸ் (22).

காதல் ஜோடியான இவர்கள், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். ரம்யா பாதுகாப்பு கேட்டு கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பதிவு திருமணம்

நானும், எனது காதலர் முருகேசும் திருமணம் செய்து கொண்டு நெல்லை வண்ணார்பேட்டையில் வசித்து வருகிறோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எங்கள் காதலுக்கு என் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வந்தது. கடந்த 10-ந் தேதி நாங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டோம். மானூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரத்தில் கிறிஸ்தவ முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். யாருடைய வற்புறுத்தல் இல்லாமல் நான், விரும்பியே திருமணம் செய்து கொண்டேன். எனது பெற்றோர் என்னையும், என் கணவரையும் கொலை செய்வதாக தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story