கோவில் இடத்தில் இருந்த பாதை அகற்றம்
திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையை அகற்ற உத்தரவிட்டார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர்-விளாமுத்தூர் சாலையில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி அருகே சாலையோரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, அவர்களின் இடத்திற்கு செல்வதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதை அமைத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதையை அகற்ற உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நேற்று அரியலூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் மேற்பார்வையில், கோவில் செயல் அலுவலர்கள் மணி, பாரதிராஜா, யுவராஜ், யுவராஜா, ரமேஷ், பெரம்பலூர் ஆய்வாளர்கள் சட்ட நாதன், கருணாகரன், வருவாய்த்துறையினர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதை அகற்றப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து அந்த இடத்தில் அந்நியர்கள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. மீறினால் சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை கோவில் சார்பில் வைக்கப்பட்டது.

Related Tags :
Next Story