திருவாரூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி பிணமாக மீட்பு


திருவாரூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 29 Sep 2019 10:45 PM GMT (Updated: 2019-09-30T00:17:59+05:30)

திருவாரூர் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார். கடந்த ஒரு வாரத்துக்குள் இதுவரை 6 பேர் ஆற்றில் மூழ்கி இறந்ததால் மக்கள் சோகத்தில் உள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே பழையவலம் அக்ரஹாரதெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி நாகலெட்சுமி (வயது68). இவர் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டின் அருகே உள்ள வெட்டாற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்த கிராம மக்கள் ஆற்றுக்கு சென்று நாகலெட்சுமியை தேடினர். மேலும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சோகம்

ஆனால் நாகலெட்சுமியை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் 20 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் நாகலெட்சுமி பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்குள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி 6 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Next Story