போலீசாருக்கு புலன் விசாரணை குறித்த பயிற்சி
அரியலூரில் போலீசாருக்கு புலன் விசாரணை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட போலீசாருக்கு புலன் விசாரணை குறித்த பயிற்சி வகுப்பு அரியலூர் ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். குற்றவியல் நீதித்துறை நடுவர் சக்திவேல், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி மாணிக்கம், அரியலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயல்பட வேண்டும்
அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி புலன் விசாரணை வழக்கின் நிறை, குறைகளையும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் போலீசாருக்கு எடுத்துரைத்தார். இதில் புலன் விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Related Tags :
Next Story