கோவையில், மதுபார் உரிமையாளரை துப்பாக்கியால் மிரட்டிய நிதி நிறுவன அதிபர் கைது


கோவையில், மதுபார் உரிமையாளரை துப்பாக்கியால் மிரட்டிய நிதி நிறுவன அதிபர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2019 3:45 AM IST (Updated: 30 Sept 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

கோவையில், மதுபார் உரிமையாளரை துப்பாக்கியால் மிரட்டிய நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

இடிகரை, 

கோவை கணபதி பாரதிநகரை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 46), நிதி நிறுவன அதிபர். இவர் கடந்த 27-ந்தேதி கோவை சாய்பாபா காலனிஎன்.எஸ்.ஆர்.சாலையில்உள்ள மதுபாருடன் செயல்படும் தனியார் ஓட்டலுக்கு மது குடிக்க சென்றார். இவர் இந்தமதுபாருக்கு தொடர்ச்சியாக செல்வதுவழக்கம்.

இந்தநிலையில்பாரில் மது குடித்து விட்டு, பணம் தராமல் செல்ல முயன்றார். உடனே பார் ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி பணம் கேட்டனர். ஆனால் அவர் பணம் கொடுக்க முடியாது என்று கூறி தகராறில்ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்ததகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மதுபார் உரிமையாளர், தகராறில் ஈடுபட்ட ஜான்சனிடம், பணம் தந்துவிட்டு செல்லுங்கள், இங்கு சத்தம் போடக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் அவர், மதுபார் உரிமையாளரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் நிதானம் இழந்த ஜான்சன் தன்னிடம் இருந்த துப்பாக்கியைஎடுத்து காட்டி, மதுபார் உரிமையாளர் மற்றும்ஊழியர்களுக்கு கொலைமிரட்டல்விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மதுபார் உரிமையாளர் இது குறித்துசாய்பாபா காலனி போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி ஜான்சனை கைதுசெய்தனர். மேலும் ஓட்டல் மற்றும் பாரில்உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைஆய்வு செய்து ஜான்சனிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவைமத்திய சிறையில்அடைக்கப்பட்டார். மதுபார்உரிமையாளரை தனியார்நிதி நிறுவன அதிபர்துப்பாக்கியை காட்டிமிரட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story