டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-2 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகிறது


டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-2 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 4 Oct 2019 4:00 AM IST (Updated: 4 Oct 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. தொகுதி-2 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்குகிறது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வண்ணம் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்திட தேவையான பல்வேறு புத்தகங்கள், மாதாந்திர போட்டி இதழ்கள் மற்றும் பத்திரிகைகள் அடங்கிய நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 2-ல் அடங்கிய பணி காலியிடங்களுக்கான போட்டி தேர்வு அறிவிப்பு வெளிவர உள்ளது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க உள்ள அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கு தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் அலுவலக வேலைநாட்களில் தினமும் காலை 10 மணி முதல் 5 மணி வரை நடத்த உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி நடத்திட திட்டமிடப்பட்டு உள்ளன. இப்பயிற்சி வகுப்புகளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் அனுபவ மிக்கவர்களும், இதுபோன்ற போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களைகொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் பயிற்சி வகுப்புகளின்போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் அவ்வப்போது நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story