மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி + "||" + Devotee dies after drowning in temple pond at Krishnagiri

கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி

கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலி
கிருஷ்ணகிரியில் கோவில் குளத்தில் மூழ்கி பக்தர் பலியானார்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலையில் கணபதி நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் பாபு (வயது 27). இவர் பெங்களூருவில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்திருந்தார். நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கணவாய்ப்பட்டி வெங்கட்ரமண சாமி கோவிலுக்கு பாபு சென்றார்.


இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் பாபு குளிக்க சென்றார். அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பாபு எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
புதுச்சத்திரம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
2. பணி முடிந்து வீடு திரும்பிய போது ஸ்கூட்டர் கவிழ்ந்து செவிலியர் பலி மற்றொருவர் படுகாயம்
காவேரிப்பட்டணம் அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்த விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பலியானார். அவருடன் சென்ற மற்றொரு செவிலியர் படுகாயம் அடைந்தார்.
3. தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி மீன் பிடித்தபோது பரிதாபம்
தாரமங்கலம் அருகே மீன் பிடித்தபோது ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.
4. சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலி குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்
சூளகிரி அருகே லாரி மீது கார் மோதி தொழில் அதிபர் பலியானார். மேலும் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் பலி 14 போலீசாருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் ஒருவர் பலியானார். மேலும் 14 போலீசாருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.