மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் டாஸ்மாக் பார்களால் அரசுக்கு வருமானம் இழப்பு பொதுமக்கள் குற்றச்சாட்டு


மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் டாஸ்மாக் பார்களால் அரசுக்கு வருமானம் இழப்பு பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Oct 2019 10:15 PM GMT (Updated: 13 Oct 2019 9:05 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் இன்றி செயல்படும் டாஸ்மாக் பார்களால் தமிழக அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டு உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கறம்பக்குடி, திருமயம், பொன்ன மராவதி, கீரனூர், ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, மணமேல்குடி, இலுப்பூர், விராலிமலை உள்ளிட்ட தாலுகாகளில் சுமார் 140 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.1 கோடிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளின் அருகே டாஸ்மாக் பார்களும் செயல்பட்டு வருகின்றது.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு ஏற்ப, மாதந் தோறும் பார்களை ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து உரிம தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1 கோடி வரை பார்கள் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் கிடைத்து வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சில டாஸ்மாக் கடைகளின் அருகே அரசின் உரிமம் பெற்ற டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகின்றன.

கூடுதல் விலைக்கு விற்பனை

பிற டாஸ்மாக் கடைகளின் அருகே நீண்ட காலமாக தமிழக அரசின் உரிமம் இன்றி டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு உரிமம் இன்றி செயல்படும் டாஸ்மாக் பார்களால் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1 கோடி வரை தமிழக அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு உரிமம் இன்றி செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நேரடியாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்று வருகின் றது.இது குறித்து பொதுமக்கள் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், போலீசார்களிடமும் புகார் தெரிவித்தும் எந்தஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிமம் இன்றி டாஸ்மாக் பார்களை நடத்தி வரும் பார்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

Next Story