தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்


தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2019 4:15 AM IST (Updated: 14 Oct 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது.

திருச்சி,

தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் திபேஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் நவீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவது. தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உரிமையாளர்களுக்காக தனி நலவாரியம் அமைக்க கோருவது. பேரிடர் காலங்களில் சங்கம் சார்பாக மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றுவது. பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ரத்த தான முகாம், பொது மருத்துவ முகாம், நலவாழ்வு முகாம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளராக ஆனந்த்குமார், துணை தலைவராக கோபிநாத், துணை பொது செயலாளர்களாக முகமது இலியாஸ், சாகுல் அமீது மற்றும் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Next Story