மாவட்ட செய்திகள்

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி + "||" + Government bus collision on motorcycle near Kuttalam; Worker kills

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி

குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி
குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
குத்தாலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா ஏனங்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில், நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா ஸ்ரீகண்டபுரத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் ஏனங்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.ஸ்ரீகண்டபுரம் மெயின்ரோட்டில் சென்றபோது எதிரே காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


தொழிலாளி பலி

இதில் பலத்த காயம் அடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாலுவின் உறவினர் பாலையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் பாபு (25) என்பவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அரசு பஸ் டிரைவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த ஹரிகிரு‌‌ஷ்ணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஜெயங்கொண்டம் அருகே, கார் மோதி கல்லூரி பேராசிரியை பலி
ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி கல்லூரி பேராசிரியை பலியானார். இதனால் அவரது 8 மாத பெண் குழந்தை தவித்து வருகிறது.
2. தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு ஐ.டி.ஐ. மாணவர் பலி
தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக இறந்தார்.
3. மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தச்சுத்தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள்- லாரி மோதிய விபத்தில் தச்சுத்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
4. வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு
வங்காளதேசத்தில் ‘புல்புல்’ புயல் தாக்கியதில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
5. வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலி தந்தை உள்பட 2 பேர் படுகாயம்
இண்டூர் அருகே வீட்டில் தூங்கிய போது மின்னல் தாக்கி சிறுமி பலியானாள். அவளுடைய தந்தை உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.