மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்ட பகுதிகளில் மணல் கடத்தல்; 5 பேர் கைது + "||" + Sand trafficking in Tanjore district areas; Five arrested

தஞ்சை மாவட்ட பகுதிகளில் மணல் கடத்தல்; 5 பேர் கைது

தஞ்சை மாவட்ட பகுதிகளில் மணல் கடத்தல்; 5 பேர் கைது
தஞ்சை மாவட்ட பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு,

ஒரத்தநாடு-மன்னார்குடி சாலையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு லாரியை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் அந்த லாரியில் மணல் கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நம்புரான்பட்டியை சேர்ந்த மோகன் (வயது32) என்பவரை கைது செய்தனர். லாரியின் உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள்.


இதேபோல் தஞ்சை அருகே அருள்மொழிப்பேட்டை பவானியம்மாள்புரம் பகுதியில் அம்மாப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த சரக்கு வேனை போலீசார் வழிமறிக்க முயன்றனர். அப்போது அதன் டிரைவர் சரக்கு வேனை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து சரக்குவேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

3 மாட்டு வண்டிகள்

விசாரணையில் எருக்கம்பள்ளத்தை சேர்ந்த ராஜா(42) என்பவர் சரக்கு வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர் எருக்கம்பள்ளத்தில் உள்ள வீட்டில் இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று ராஜாவை கைது செய்தனர். தஞ்சை அருகே உள்ள நல்லவன்னியன்குடிக்காடு பகுதியில் நேற்று அம்மாப்பேட்டை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 மாட்டு வண்டிகளில் வெண்ணாற்றில் இருந்து மணல் கடத்தி வரப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து அந்த 3 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த கோவிலூர் வடக்குத்தெருவை சேர்ந்த ராபர்ட், ரவிச்சந்திரன், குணபதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல் பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் மணல் கடத்தி வந்த சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கண்டமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
விழுப்புரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
2. புதுக்கோட்டை அருகே கீரனூரில் ரூ.200 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகள் பறிமுதல்
புதுக்கோட்டை அருகே கீரனூரில் விற்பதற்காக வைத்திருந்த சிவன், அம்மன், விநாயகர் உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்புள்ள 5 பஞ்சலோக சாமி சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
3. கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேர் கைது
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற தாய்-மகன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. பாகிஸ்தானில் தொடரும் அவலம்: இந்து பெண்ணை கடத்தி கட்டாய மத மாற்றம்
பாகிஸ்தானில் இந்து பெண் கடத்தப்பட்டு கட்டாய மத மாற்றம் செய்து, முஸ்லிம் இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
5. தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த குரங்கு, அணில், ஓணான் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை தாய்லாந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை