திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2019 4:00 AM IST (Updated: 23 Oct 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில், வங்கிகள் இணைப்பை கைவிடக்கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும். வராக்கடன்களை வசூலிக்க வேண்டும். கடன் திரும்ப செலுத்தாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராத கட்டணம் நிறுத்தப்பட வேண்டும். சேவை கட்டணத்தை உயர்த்த கூடாது. வைப்புநிதி வட்டி உயர்த்தப்பட வேண்டும். காலிபணி இடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூர் பனகல் சாலையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் கூட்டமைப்பு தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தர்மதாஸ், பாலதண்டாயுதம், வங்கி ஊழியர்கள் கிரு‌‌ஷ்ணசாமி, அதி‌‌ஷ்டகுமார், சாமிநாதன், காயரோகணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என கோ‌‌ஷமிட்டனர்.

Next Story