மாவட்ட செய்திகள்

பருவம் தவறிய மழை: பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு + "||" + Rains With regard to cultivation The Cabinet Subcommittee will discuss Devendra Patnavis Announcement

பருவம் தவறிய மழை: பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு

பருவம் தவறிய மழை: பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு
மராட்டியத்தில் பருவம் தவறிய மழையால் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் குறித்து மந்திரிசபை துணைக்குழு விவாதிக்கும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,

மராட்டியத்தில் சில மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பருவம் தவறிய கனமழை பெய்து வருகிறது. கியார் புயல் காரணமாகவும் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.


இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

பருவம் தவறிய மழையால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து சனிக்கிழமை(இன்று) மந்திரிசபை துணைக்குழு கூடி விவாதிக்கும். விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க மத்திய அரசிடம் இருந்து உதவி பெறப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகளை மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று நிலைமையை பார்வையிடுமாறு தெரிவித்துள்ளேன். இந்த பிரச்சினையை மாநில அரசு தீவிரமாக கையாண்டு வருகிறது.

முதல்கட்ட ஆய்வில் 12 மாவட்டங்களில் உள்ள 325 தாலுகாக்களில் 54 லட்சத்து 22 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களில் சோளம், நெல், பருத்தி மற்றும் சேயாபீன்ஸ் போன்றவை அடங்கும்.

சேத மதிப்பீட்டை அடுத்த வாரத்திற்குள் முழுமையாக அளிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் திடீர் மழை ; காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது
ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.
2. டெல்டா பகுதியில் கொட்டிய மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை
டெல்டா பகுதியில் கொட்டிய மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
3. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வருகின்றன. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
5. கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.