மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் காயம் 6 பேர் மீது வழக்கு + "||" + Conflict between the two sides due to prejudice; 2 people sued and 6 others injured

முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் காயம் 6 பேர் மீது வழக்கு

முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்; 2 பேர் காயம் 6 பேர் மீது வழக்கு
கொரடாச்சேரி அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரடாச்சேரி,

கொரடாச்சேரி அருகே உள்ள உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 47). அதே பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (44). விவசாயிகள். இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சுந்தரமூர்த்தி மனைவி லதாவை, முத்துசாமி தரகுறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சுந்தரமூர்த்தி, முத்துசாமியை கண்டித்துள்ளார். இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முத்துசாமி, அவருடைய மகன் பிரேம்குமார், உறவினர்கள் சேகர், வினோத் ஆகிய 4 பேரும் சேர்ந்து சுந்தரமூர்த்தியை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


6 பேர் மீது வழக்கு

இதேபோல சுந்தரமூர்த்தி, அவருடைய மகன் சூர்யா ஆகியோர் சேர்ந்து முத்துசாமியை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருதரப்பினரும் தனிதனியாக கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் முத்துசாமி, பிரேம்குமார் சேகர், வினோத், சுந்தரமூர்த்தி, சூர்யா ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் போலீஸ் காவல் முடிவடைந்தது: சுரேஷ் மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் போலீஸ் காவல் முடிவடைந்து சுரேசை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கு 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
2. பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; 2 வாலிபர்கள் பலி
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 வாலிபர்கள் பலியாயினர்.
3. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை, பணம் கொள்ளை வழக்கு: கொள்ளையர்கள் சுரேஷ், கணேசன் மீண்டும் சிறையில் அடைப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகை, பணம் கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்கள் சுரேஷ், கணேசன் மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
4. லாரி-கார் மோதல்; இடிபாடுகளுக்குள் சிக்கிய போதகர் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்டு சிகிச்சை
ராஜாக்கமங்கலம் அருகே லாரி-கார் மோதி கொண்ட விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய போதகர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
5. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது வழக்கு
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.