மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி கலெக்டர் ஆய்வு + "||" + Local elections: polling machines verified

உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி கலெக்டர் ஆய்வு

உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. இதை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணி கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.


இதில் 2 ஆயிரத்து 631 வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் 900 கன்ட்ரோல் யூனிட் என மொத்தம் 3 ஆயிரத்து 531 எந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு பணி நடந்தது.

கலெக்டர் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணியை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஸ்டீபன் ஜெயசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, முருகன், பெல் நிறுவன பொறியாளர்கள் ராஜீ, மகேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும் - அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தல் வந்தாலே திமுகவிற்கு காய்ச்சல் வந்துவிடும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. ‘உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மக்களே தேர்வு செய்வார்கள்’ முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி
‘உள்ளாட்சி தேர்தலில் மேயர்களை மக்களே தேர்வு செய்வார்கள்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
3. மங்களூரு, தாவணகெரே மாநகராட்சிகள் உள்பட, 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் - காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது
மங்களூரு, தாவணகெரே மாநகராட்சிகள் உள்பட 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.
4. உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சரிபார்க்கும் பணி தொடக்கம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.