மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Nov 2019 10:45 PM GMT (Updated: 8 Nov 2019 8:20 PM GMT)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமைஆசிரியர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

வாணாபுரம் அருகே அத்திப்பாடி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக கிருஷ்ணமூர்த்தி (வயது 53) என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் உதவி ஆசிரியர் மதலைமுத்து (50) பணியாற்றினார்.

இவர்கள் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் புகார் கூறினர். இதனை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் உத்தரவின்பேரில் மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம், பள்ளிகள் ஆய்வாளர் குமார், வட்டார கல்வி அலுவலர் ஷகிலா, பவானி மற்றும் அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆசிரியர்கள் இருவரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து வட்டார கல்வி அலுவலர்கள் பரிந்துரையின்பேரில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆசிரியர் மதலைமுத்து ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் நடராஜன் உத்தரவிட்டார்.

Next Story