குண்டர் சட்டத்தில் என்ஜினீயர் கைது
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய என்ஜினீயர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆவல்சின்னாம்பாளையத்தில் வீடு புகுந்து 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் அள்ளி சென்றனர். இதேபோன்று வீரல்பட்டியில் ஒரு பெண்ணிடம் முகவரி கேட்பது போன்று நடித்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் வழிப்பறி செய்தனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த என்ஜினீயர் கீரி கார்த்தி என்கிற சுந்தரபாண்டியன் (வயது 33) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் சுந்தரபாண்டியன் மீது கோவையை அடுத்த சூலூரில் வீடு புகுந்து கார் திருடியது, சிவகங்கை மாவட்டத்தில் 13 வழக்குகள், மதுரை, தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதால் சுந்தரபாண்டியனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் சுந்தர பாண்டியனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story