மாவட்ட செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அன்னாபிஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் + "||" + Security arrangements for Gangaikonda Cholapuram Brihadeeswarar Temple Annabhishekam

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அன்னாபிஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அன்னாபிஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை நடைபெற உள்ள அன்னாபிஷேகத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீன்சுருட்டி,

மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அன்று காலை முதல் மாலை வரை 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து லிங்கத்தின் மேல் சாத்தப்பட்டு அன்று மாலை 6 மணி அளவில் தீபாராதனை காட்டப்பட உள்ளது. இந்த அபிஷேகத்தை காண உள்ளூர், வெளியூரை சேர்ந்த திரளான மக்கள் வருவார்கள்.


இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், அன்னாபிஷேக கமிட்டியினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து செய்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை எந்தெந்த இடங்களில் பொருத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

ஆலோசனை

கோவிலுக்குள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ளே நடக்கும் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளை வெளியில் இருந்து கண்டு தரிசனம் செய்வதற்காக காணொலித்திரை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், அரியலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, இந்து சமய அறநிலையத்துறை பிரகதீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் சிலம்பரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் பணியாளர்களே வடம் பிடித்து இழுத்தனர்
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கோவில் பணியாளர்களே தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
2. திருச்சி சம்பவம் எதிரொலி: புதுக்கோட்டையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
திருச்சி சம்பவம் எதிரொலியாக புதுக்கோட்டையில் பெரியார் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன.
3. நடிகை கங்கனா ரணாவத்தை சந்தித்து மத்திய மந்திரி அத்வாலே ஆதரவு ‘மும்பையில் இருக்கும்போது பயப்பட வேண்டாம்’
மத்திய மந்திரிஅத்வாலேநேற்றுநடிகை கங்கனாரணாவத்தைநேரில் சந்தித்து தனதுஆதரவை தெரிவித்தார்.
4. காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் ராஜ கோபுர உச்சியில் ஒரு மணி நேரமாக அமர்ந்திருந்த மயில்
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் ராஜ கோபுர உச்சியில் ஒரு மணி நேரமாக அமர்ந்திருந்த மயில்.
5. வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
வேலூர் மாநகராட்சி பகுதியில் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் சதுப்பேரி ஏரி உள்பட 4 நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி முக்கிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை