மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே, தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது + "||" + Near Thoothukudi He went on a motorbike with his father Flush jewelry woman Youth arrested

தூத்துக்குடி அருகே, தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது

தூத்துக்குடி அருகே, தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு - வாலிபர் கைது
தூத்துக்குடி அருகே தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் அத்திமரப்பட்டியை சேர்ந்தவர் பால்துரை. இவருடைய மகள் ஜெயா (வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு, தனது தங்கை தங்கரதியுடன் இரவில் பஸ்சில் ஸ்பிக்நகர் வந்து இறங்கி னார். அங்கு இருந்து அவரது தந்தை பால்துரை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டு இருந்தார். அவர்கள் அத்திமரப்பட்டி ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிள் திடீரென பால்துரையை முந்தி சென்றது.

அப்போது, அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மர்ம நபர் திடீரென்று ஜெயா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிள்ளைமுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் நகையை பறித்து சென்றது அத்திமரப்பட்டி வேதகோவில் தெருவை சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் மணி (35) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மணியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விருதம்பட்டில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய வாலிபர் கைது - ரவுடி ஜானிக்கு வலைவீச்சு
விருதம்பட்டில் ரூ.10 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான ரவுடி ஜானியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
2. தாயை அவதூறாக பேசியதால் ஆத்திரம் - அண்ணனை கொலை செய்த வாலிபர் கைது
தாயை அவதூறாக பேசியதால் ஆத்திரமடைந்து அண்ணனை கட்டையால் தாக்கி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. திருத்துறைப்பூண்டியில், லோடு வேனில் கடத்தி வந்த 576 மதுபாட்டில்கள் பறிமுதல் - வாலிபர் கைது
திருத்துறைப்பூண்டியில் லோடு வேனில் கடத்தி வந்த 576 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.
4. லால்குடியில், நண்பனை கத்தியால் குத்திய வாலிபர் கைது
லால்குடியில் நண்பனை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. வெள்ளகோவில் அருகே, ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 6½ பவுன் நகை பறிப்பு - 3 பேரை போலீசார் தேடுகிறார்கள்
வெள்ளகோவில் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 6½ பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-