மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே, பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Near Anthiyur, public road picket

அந்தியூர் அருகே, பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே, பொதுமக்கள் சாலை மறியல்
அந்தியூர் அருகே தார்சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று காலை 10.30 மணி அளவில் அந்த பகுதியில் ஒன்று திரண்டார்கள். பின்னர் தங்கள் பகுதியில் தார்சாலை அமைக்கக்கோரி அந்த வழியாக வந்த பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், ‘விரைவில் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. தடுப்பணை கட்ட மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணிக்கு அப்பகுதியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட தடை
பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட்டம் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
4. கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.
5. விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
விவசாய நிலத்தில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர்.