3,317 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினர்


3,317 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினர்
x
தினத்தந்தி 12 Nov 2019 11:00 PM GMT (Updated: 12 Nov 2019 7:34 PM GMT)

3,317 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் வழங்கினர்.

திருச்சி,

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம், திருவானைக்காவல் தனியார் திருமண மண்டபங்களில் நேற்று மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந் தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.

விழாக்களில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மொத்தம் 3,317 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 96 லட்சத்து 67 ஆயிரத்து 959 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

அமைச்சர்கள் பேச்சு

விழாவில் அமைச்சர்கள் பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் 21-8-2019 முதல் 13-9-2019 வரை அனைத்து கிராமங்கள் மற்றும் வார்டுகளில் 503 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் மொத்தம் 17 ஆயிரத்து 713 மனுக்கள் பெறப்பட்டு அதில் 9 ஆயிரத்து 982 மனுக்கள் ஏற்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை பெற்றவர்கள் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டனர். விழாவில், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Next Story