மீனவர்களை பட்டியல் இன மக்களாக அறிவிக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில், மீன் தொழிலாளர்கள் மனு


மீனவர்களை பட்டியல் இன மக்களாக அறிவிக்க நடவடிக்கை கலெக்டர் அலுவலகத்தில், மீன் தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 20 Nov 2019 11:00 PM GMT (Updated: 20 Nov 2019 2:37 PM GMT)

மீனவர்களை பட்டியல் இன மக்களாக அறி விக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மீன் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு மீன்பிடி தொ ழிற்சங்க கூட்டமைப்பு தலை வர் செலஸ்டின், குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட பொதுச்செயலாளர் அந் தோணி, தலைவர் அலெக் சாண்டர், கவுரவ தலைவர் என்.அந்தோணி, துணைத் தலைவர் தனீஸ், உள்பட பலர் நேற்று நாகர் கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பட்டியல் இனமாக...

அனைத்து நாடுகளிலும் மீனவர்களுக்கென தனி அை- மச்சகம் உள்ளது. ஆனால் நமது நாடு சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் கடந்த பிறகும் தனி அமைச் சகம் இன்றி மீனவ மக்கள் புறக்கணிக் கப்பட்டுள்ளனர். எனவே மத்திய அரசால் அறிவிக் கப்பட்ட மீன்துறைக் கான அமைச்சகத்துக்கு தே வை யான நிதி ஒதுக்கி, செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் மீனவ மக்களை பட்டியல் இன மக்களாக அறிவிப்போம் என வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்த மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே அனைத்து பகுதி மீனவ மக்களையும் பட்டியல் இனமாக அறி வித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

24 அம்ச கோரிக்கைகள்

மீனவர்கள் மீன்பிடி தொ ழிலின் போது விபத்தில் சிக்கி தவிக்கும் போதும், காணாமல் போகும்போதும் உடனடியாக காப்பாற்ற வசதியாக கன்னி யாகுமரியில் ஹெலிகாப்டர் நிறுத்தம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட நீதிபதி வேணுகோபால் ஆணைய பரிந்துரையை ஏற்று மீனவருக்கான தனி சட்டமன்ற தொகுதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும். அனைத்து வகையான உள்நாட்டு மீன் தொழிலாளர்களுக்கும் பஞ்சகால நிவாரணங்கள் வழங்கிட துரித நடவடிக்கை எடுத்து ரூ.4500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றி ருந்தன.

கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

இதேபோல் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (ரெட் ஸ்டார்) மாவட்ட செய லாளர் பால்ராஜ் தலைமையில் ஏராளமானோர் நேற்று நாகர் கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

தோவாளை தாலுகா மாதவலாயம் புளியன்விளை பகுதியில் ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அவருடைய மகள் சுசீலா 20 ஆண்டுகளாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சிலர் சுசீலாவை அடித்து விரட்டினர். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது. சுமார் 1 ஆண்டாக சுசீலா தான் குடியிருந்த வீட்டை இழந்து உறவினர்கள் வீட்டில் தங்கி வருகிறார். எனவே அவருக்கு வீட்டை மீண்டும் ஒப்படைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Next Story