நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 17 பேருக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்


நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 17 பேருக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Nov 2019 4:30 AM IST (Updated: 23 Nov 2019 10:21 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 17 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்- மகளிா் திட்டம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நாகர்ே-்காவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று நடைபெற்றது. சென்னை, கோவை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 62 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இதில் 10-ம் வகுப்பு முதல் எம்.பி.ஏ., பொறியாளர்கள், ஆசிரியர்கள், டிப்ளமோ படித்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி தகுதி உடையவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

பணி நியமன ஆணை

இதில் 17 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார். முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்படும் கைவினைப்பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக சமையல் பொருட்கள் கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பிச்சை, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளா் பைஜு நிசித்பால், உதவி திட்ட இயக்குனர்கள் சாஜி, அருண் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story