திருச்செங்கோட்டில் கார்-பஸ் மோதல்; 12 பேர் காயம்


திருச்செங்கோட்டில் கார்-பஸ் மோதல்; 12 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Nov 2019 3:30 AM IST (Updated: 28 Nov 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் காரும், பஸ்சும் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர்.

திருச்செங்கோடு,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று காலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ் திருச்செங்கோடு - ஈரோடு ரோட்டில் உள்ள ராஜாகவுண்டம்பாளையம் என்ற இடத்தின் அருகே சென்றபோது அந்த வழியே வந்த ஒரு காரும், இந்த பஸ்சும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. தொடர்ந்து ரோட்டோரம் இருந்த ஒரு மரத்தின் மீது மோதியபடி அந்த பஸ் நின்று விட்டது.

இதில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரின் ஒரு பக்கவாட்டு பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் மணிகண்டன் (வயது 32) லேசான காயங்களுடன் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதேபோல காரை ஓட்டி வந்த ஈரோட்டை சேர்ந்த விக்னே‌‌ஷ் (32) என்பவரும் சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பினார்.

12 பேர் காயம்

மேலும் இந்த விபத்தில் பஸ்சில் இருந்த கண்டக்டர் விஜயன் (27), பயணிகள் சுஜேந்திரன் (31), தினே‌‌ஷ் (30), தனசேகரன் (35), பிரபுராஜா (18), கனகவள்ளி (38), ஜோதிமணி (36) ராஜா (48), கணேசமூர்த்தி (68), கார்த்திகேயன் (20) ஆகியோரும் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story