நாகர்கோவில் தொழில் அதிபரிடம் ரூ.84¾ லட்சம் மோசடி கணவன், மனைவி உள்பட 5 பேர் மீது வழக்கு
முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.84¾ லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
சென்னை கோயம்பேடு தெற்கு ரதவீதியை சேர்ந்த ஏழுமலை (வயது 42). இவர் சென்னையில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தொழில் சம்பந்தமாக எனக்கும் (சீனிவாசன்), ஏழுமலைக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பண மோசடி
ஏழுமலை, என்னிடம் பணம் முதலீடு செய்தால் அந்த பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகவும், பல நபர்களை சேர்த்து விட்டால் கமிஷன் தருவதாகவும் கூறினார். இந்த ஆசைவார்த்தைகளை நம்பி நான் ரூ.84 லட்சத்து 85 ஆயிரத்து 700-ஐ ஏழுமலை வங்கி கணக்கில் செலுத்தினேன்.
பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஏழுமலை சொன்னபடி இரட்டிப்பாக்கி தரவில்லை. மேலும் கொடுத்த பணத்தை கேட்ட போது பணத்தையும் தராமல் ஏமாற்றி வந்தார்.
5 பேர் மீது வழக்கு
இதற்கு உடந்தையாக ஏழுமலை மனைவி சித்ரா, சென்னையை சேர்ந்த முருகன், கலை மற்றும் தமிழ் ஆகியோரும் இருந்தனர். அந்த பணத்தை பெற்றுத்தர அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஏழுமலை, அவரது மனைவி சித்ரா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story