தூத்துக்குடியில் பால் வியாபாரி கொலையில் வாலிபர் கைது


தூத்துக்குடியில் பால் வியாபாரி கொலையில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2019 10:45 PM GMT (Updated: 30 Nov 2019 2:24 PM GMT)

தூத்துக்குடியில் பால் வியாபாரி கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள டி.சவேரியர்புரத்தை சேர்ந்தவர் அந்தோணி முத்து என்ற தங்கராஜ் (வயது 62). இவர் தூத்துக்குடி ஜே.ஜே.நகரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 

ஜே.ஜே.நகரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை அந்தோணி முத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற துறைமுக ஊழியரான நடராஜன் (60) என்பவருக்கு விற்றார். இவர்கள் 2 பேரின் இடத்துக்கும் நடுவே ஒரு சுவர் உள்ளது. அந்த சுவரை பொதுச்சுவராக பயன்படுத்துவது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது.

நேற்று முன்தினம் நடராஜன், அவருடைய மகன் மாரிசெல்வம் (22) ஆகியோர் அந்தோணி முத்துவை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார், நடராஜன், மாரிசெல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நடராஜன் கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த மாரிசெல்வத்தை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் மாப்பிள்ளையூரணி காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மாரிசெல்வத்தை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story