மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தல்: தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு + "||" + Sand mining in car near Ranipet: Police search for those who escaped

ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தல்: தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு

ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தல்: தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு
ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் அருகே சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்திய போது காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்த போது காரின் உள்புறத்திலும், பின்பகுதியிலும் 10 மூட்டைகளில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் மணல் மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ராணிப்பேட்டையில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் அகற்றம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ராணிப்பேட்டையில் சாலையோர தள்ளுவண்டி கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
2. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலார் பம்புசெட்-மின்வேலி அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோலார் பம்புசெட், சூரிய மின் வேலி அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாக, வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3. ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணிக்கடைகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் அறிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் துணிக்கடைகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
4. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-