மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் + "||" + Srirangam is a lioness The Temple is consecrated

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் மழையையும் பொருட் படுத்தாது பக்தர்கள் குவிந்தனர்.
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக காட்டழகிய சிங்கப்பெருமாள் எனப்படும் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவில் இருக்குமிடம் முற்காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் இக்கோவில் காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில் என்று அழைக்கப் படுகிறது.


இக்கோவிலில் கடந்த 2001-ம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் முழு அளவில் பழமை மாறாமல் திருப்பணிகளும், வெளிப்பிரகார விரிவாக்கம் உள்பட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18-ந் தேதி கருவறை பாலாலயம் நடைபெற்றது. இதையடுத்து கருவறை சார்ந்த பகுதிகளில் தூய்மை மற்றும் திருப்பணிகள் நடைபெற்றன. 27-ந் தேதி மாலை பாஞ்சராத்தர ஆகம முறைப்படி பூர்வாங்க பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. 28-ந் தேதி காலை கொள்ளிடம் ஆற்றிலிருந்து புனிதநீர் வெள்ளிக் குடத்தில் எடுத்து யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

யாகசாலை பூஜைகள்

அதைத்தொடர்ந்து 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அன்று மாலை 3-ம் கால யாக சாலையும், 29-ந் தேதி காலை, மாலை வேளைகளில் முறையே 4,5-ம் கால வேள்விகள் நடைபெற்றன. 30-ந் தேதி காலை, மாலை வேளைகளில் முறையே 6, 7-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணியளவில் 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி காலை 8 மணியளவில் மகாபூர்ணாஹூதி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து யாக சாலையிலிருந்து காலை 8.30 மணியளவில் கடங்கள் புறப்பட்டு காலை 9 மணியளவில் லட்சுமி நரசிம்மர் கருவறை விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்கள் ஆகியவற்றுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பெருமாளே சரணம், திருமாலே சரணம் என பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

விழாக்கோலம்

கும்பாபிஷேகத்தையொட்டி சிங்கப்பெருமாள் கோவில் பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தன. கோவில் வளாகம் முழுவதும் வாழை மரங்கள், மாவிலை தோரணங்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அன்னதானமும் நடைபெற்றது.

யாகசாலை நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் வேதபாராயணங்கள், திவ்யபிரபந்த கோ‌‌ஷ்டிகள் நடைபெற்றன. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆழ்வார்திருநகரி ஜீயர் எம்பெருமனார், முசிறி எம்.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் பிரவீன்குமார், ரெங்கவிலாஸ் சீவல் உரிமையாளர் ரெங்கநாதன், பி.ஜி.நாயுடு ஸ்வீட்ஸ் உரிமையாளர் பாலாஜி, அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெ‌‌ஷல் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கே.ஆர்.வி.கணேசன், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பக்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது மிதமான மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால், மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்திருந்தனர்.

யாகசாலை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள் நடத்தினர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், உபயதாரர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பக்தர்கள் கை குலுக்கக்கூடாது; கோவில், தேவாலயங்கள், மசூதிகளுக்கு கட்டுப்பாடு - தமிழக அரசு அறிவிப்பு
ஊரக பகுதிகளில் உள்ள கோவில்கள், சிறிய தேவாலயங்கள் மற்றும் சிறிய மசூதிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை பின்பற்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2. கோவில் பூட்டை உடைத்து திருட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை வீசி சென்ற மர்மநபர்கள்
கீரனூரில் கோவில் பூட்டை உடைத்து திருட்டு பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியல்களை வீசி சென்ற மர்மநபர்கள்.
3. கோவில் வளாகத்தில் மட்டுமே சுற்றிவந்த கெங்கையம்மன் சிரசு - நள்ளிரவு 1½ மணி நேரத்தில் விழா முடிந்தது
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் இன்றி கோவில் வளாகத்திலேயே அம்மன்சிரசு சுற்றிவந்து நள்ளிரவு 1½ மணி நேரத்தில் விழா முடிந்தது.
4. ‘கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள்
கோவில், மசூதி, தேவாலய நிகழ்ச்சிகளை வருகிற 31–ந்தேதி வரை நிறுத்தி வையுங்கள்’ என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் தீ ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் ஏற்பட்ட தீயை ஊழியர்கள் உடனே அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.