மாவட்ட செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து + "||" + People's grievance day meeting at the collector's office canceled as election rules go into effect

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதால், உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறும் வகையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள், கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த மனுக்கள் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.


வீடுகளை பழுதுபார்க்க வேண்டும்

புதுக்கோட்டை அருகே உள்ள சத்தியமங்கலம் அரசினர் தெரு காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் பெட்டியில் போட்ட மனுவில், நாங்கள் குடியிருக்கும் காலனி வீடுகள் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக எங்கள் வீடுகளில் நீர் ஊற்று எடுக்கிறது. மேலும் மேற்கூரையில் இருந்து மழைநீர் வீட்டிற்குள் புகுந்து வருகிறது. இதனால் நாங்கள் கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உள்ள காலனி வீடுகளை உடனடியாக பழுதுபார்த்து கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசை கண்டித்து 6 நாட்கள் நடைபயணம் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
மத்திய அரசை கண்டித்து 6 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.
2. அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றங்களை தடுக்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றங்கள் நடப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் அறிவுறுத்தினார்.
3. கோவை மாவட்டத்தில் 54 கிராம பஞ்சாயத்துகளில் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படும் கலெக்டர் தகவல்
கோவை மாவட்டத்தில் 54 கிராம பஞ்சாயத்துகளில் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
4. பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
பொங்கல் பண்டிகை இன்று(புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பஸ் நிலையம், ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மேலும், பொருட்கள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
5. திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
திண்டுக்கல்லில் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.