மாவட்ட செய்திகள்

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல் + "||" + Village roadmap with gulls asking for drinking water near Sulagiri

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியல்
சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர்,

சூளகிரி அருகே உள்ள மருதாண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்டது ஜோகீர்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதானதால் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இது சம்பந்தமாக ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


சாலைமறியல்

இந்தநிலையில் குடிநீர் கேட்டு நேற்று கிராம மக்கள் காலிக்குடங்களுடன் அப்பகுதியில் உள்ள சூளகிரி-பேரிகை சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் மற்றும் ஊராட்சி செயலாளர் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. குடிநீர் வினியோகம் செய்யக்கோரி, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தாசலத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஆலங்குடி அருகே பாதை பிரச்சினை: போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டி உடல் அடக்கம்
ஆலங்குடி அருகே பாதை பிரச்சினையால் போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
3. குறைதீர்க்கும் கூட்டத்தில், குடிநீர் கேட்டு 2 கிராம மக்கள் மனு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர்.
4. குடிநீர் சீராக வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் - அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
உடுமலை அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட பொதுமக்கள் முயன்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியல் முயற்சியை கைவிட்டனர்.
5. குடிநீர் பயன்பாட்டில் சிக்கன நடவடிக்கை
சென்னையில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த நிலை செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மாறத்தொடங்கியது. பரவலாகப் பெய்த மழை, வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து, கிருஷ்ணா நதி நீர் திறப்பு போன்ற காரணங்களால் சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு அகன்றுள்ளது.